பயிர்களை சேதப்படுத்திய யானைகள்


பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரம் கிராமத்தில் பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே மாரச்சந்திரம் கிராமத்தில் பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

யானைகள் முகாம்

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 7 யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் முகாமிட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் மாரச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. இதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பட்டாசு வெடித்து விரட்டினர்

பின்னர் அந்த யானைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்று கொண்டு இருந்தன. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.


Next Story