ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள்


ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள் நாகமங்கலம் ஏரியில் குளித்து மகிழ்ந்தன.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே ஊருக்குள் புகுந்த 60 காட்டு யானைகள் நாகமங்கலம் ஏரியில் குளித்து மகிழ்ந்தன.

காட்டு யானைகள்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வழியாக தமிழக வனப்பகுதிக்குள் வந்தன. இந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர், ஊடேதுர்க்கம் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு இந்த யானைகள் வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தன.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 60 யானைகள் ஊடேதுர்கம் காட்டிற்கு இடம் பெயர்ந்தன. நேற்று இங்கிருந்து வெளியேறிய 60 காட்டு யானைகளும் நாகமங்கலம் கிராமத்திற்குள் புகுந்தன. பின்னர் அந்த யாைனகள் அங்குள்ள ஏரிக்கு சென்றன. அங்கு யானைகள் தண்ணீரை தும்பிக்கையால் உறிந்து மற்ற யானைகள் மீது ஊற்றி ஆனந்த குளியல் போட்டன.

பட்டாசு வெடித்து விரட்டினர்

இதுகுறித்து பொதுமக்கள் ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தற்போது வனப்பகுதியில் அதிகளவில் யானைகள் இருப்பதால் எந்த நேரத்திலும் இரவில் விவசாய நிலங்களுக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே விவசாய நிலங்களில் யாரும் மின்வேலிகள் அமைக்க கூடாது. விவசாய நிலங்களில் இரவு காவலுக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story