விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்


விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன.

யானைகள் அட்டகாசம்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன. அதில் 40 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. மீதமுள்ள யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், லிங்கதீரணப்பள்ளி கிராமங்களில் புகுந்தன. அந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து ராகி போர், வெள்ளரி செடிகள், பீன்ஸ் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்றபோது பயிர்கள் சேதமடைந்துள்ளதை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர்.

சானமாவு காடு

இதனிடையே நேற்று முன்தினம் 40 யானைகள் ஊடேதுர்க்கம் வழியாக ஓசூர் அருகே உள்ள சானமாவு காட்டுக்குள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளால் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்றனர். அப்போது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சானமாவு காட்டில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனப்பகுதியையொட்டி உள்ள சானமாவு, சினிகிரிபள்ளி, பீர்ஜேப்பள்ளி, போடூர், ராமாபுரம், ஆலியாளம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர்.


Next Story