தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; பட்டாசு வெடித்து விரட்டப்பட்டது


தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்; பட்டாசு வெடித்து விரட்டப்பட்டது
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருேக வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டிவிட்டனர்.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருேக வாழை தோட்டத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டிவிட்டனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஜீர்கள்ளி வனச்சரகத்தில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது வாழை தோட்டத்துக்குள் புகுந்தன.

அதன்பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழை குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்த தொடங்கின. சத்தம் கேட்டு் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சந்திரசேகர் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது தோட்டத்தில் யானைகள் நின்று கொண்டு வாழைகளை நாசப்படுத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பட்டாசு வெடித்து

உடனே அவர் இதுபற்றி பக்கத்து தோட்டத்து விவசாயிகளிடமும், ஜீர்கள்ளி வனத்துறையினரிடமும் கூறினார். அதைத்தொடர்ந்து வனத்துறையினரும், விவசாயிகளும் அங்கு சென்று பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் யானைகள் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.


Next Story