மின்கம்பியாளர், உதவியாளர்களுக்கு தகுதி கண்டறியும் தேர்வு
மின்கம்பியாளர், உதவியாளர்களுக்கு தகுதி கண்டறியும் தேர்வு நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மின் கம்பியாளர் உதவியாளர்களுக்கான தகுதி கண்டறியும் தேர்வு வருகிற செப்டம்பர் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேலும் இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடம் இருந்தும், தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு வருகிற 26-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் தெரிவித்தார்.