8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் 8 அம்ச ேகாரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போரட்டம் நடத்தினர்
தேனி
உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியில் 8 அம்ச ேகாரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போரட்டம் நடத்தினர் கிராமத்தில் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கள்ளர் சீரமைப்பு துறை விடுதிகள் பிற்படுத்தப்பட்டோர் துறைக்கு மாற்றப்பட்டது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் கம்பம், கூடலூர், போடி, உசிலம்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி அங்கு வீரபாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கூறுகையில், போடியில் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றனர்.
Related Tags :
Next Story