வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்


வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
x

வக்கீலுக்கு தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

செல்போன் பழுது

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 54). வக்கீல். இவர் இணையதளத்தில் அமேசான் செயலி வாயிலாக புதிய ரக செல்போனை கடந்த 2.1.2020 அன்று வாங்கினார். கொரோனா காலத்தில் அந்த செல்போனுக்கு வாரண்டி காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த செல்போன் பழுதானதால், கடந்த 12.7.2021 அன்று பாண்டியன் தனது செல்போனை பழுது நீக்கித்தருமாறு பெரம்பலூர் கம்பன் தெரு அருகே மாடிக்கட்டித்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவனத்தின் பெரம்பலூர் சர்வீஸ் சென்டரில் கொடுத்திருந்தார். அதற்கு வாரண்டி காலம் இருப்பினும், பழுதுநீக்கும் சேவைக்காக ரூ.236-ஐ அந்த சர்வீஸ் சென்டரில் ரொக்கமாக வசூலித்தனர்.

ஆனால் ஓரிரு நாட்களிலேயே அந்த செல்போன் மீண்டும் பழுதானது. இதையடுத்து பாண்டியன் மீண்டும் செல்போனை எடுத்து சென்று, சேவை மையத்தை அணுகியபோது, ரூ.7 ஆயிரத்து 200 கொடுத்தால்தான் பழுதை சரி செய்து கொடுக்க முடியும் என்று கூறி, அவரிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்தி, அவரை அலைக்கழித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வக்கீல் பாண்டியன், இதுகுறித்து பெரம்பலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் புகார் மனுவை தாக்கல் செய்தார்.

நிவாரணம்

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், மனுதாரரிடம் புதுடெல்லி குர்கானில் உள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பெரம்பலூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் சேவை மைய மேலாளர் ஆகியோர் சேவையில் குறைபாடு செய்துள்ளனர். எனவே எதிர்மனுதாரர் இருவரும் மனுதாரர் பாண்டியனுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.


Next Story