100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்


100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டம்
x

வீரவநல்லூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் அருகே உள்ள மலையான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையான்குளம், பாடகபுரம், மாதுடையார்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் அவர்களுக்கு சரிவர வேலை வழங்காமலும், புதிய அட்டைதாரர்களுக்கு அட்டை வழங்காமலும் தாமதமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே ஏராளமான பெண்கள் உள்பட சுமார் 100 பேர் தரையில் அமர்ந்து வேலை வாய்ப்பு அட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த மலையான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, சேரன்மாதேவி யூனியன் பணி மேற்பார்வையாளர் கமலாபாய் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கை குறித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story