ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2023 12:30 AM IST (Updated: 12 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி, வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

தற்செயல் விடுப்பு போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 60 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்கள் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பள நிதி தனியாக உருவாக்க வேண்டும், சம்பளம் கருவூலத்தில் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட கணினி ஆப்ரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 50 பேர் நேற்று விடுப்பு எடுத்து பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டு

அதேபோல் சாணார்பட்டி ஒன்றியத்திலுள்ள 21 ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர்.

வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்திலும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிக்கு வரவில்லை. இதனால் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகங்களில் வழக்கமான பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இதேபோல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆரோக்கிய ஜார்ஜ் தலைமையில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தினர். இதில், ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


Next Story