வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்


வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
x

வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கான தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் நிலவுவதையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொழில் நல்லுறவு பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவை பேணி பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை ஐகோர்டு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது. விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பெரம்பலூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் இருந்து பெற்று அதற்குரிய கட்டணத்தை விண்ணப்பதாரர் தொழிற்சங்கமாக இருப்பின் ரூ.100-ம், வேலை அளிப்பவராக இருப்பின் ரூ.250-ம் தமிழக அரசின் கருவூலத்துறை இணையதளம் வாயிலாக கணக்கு தலைப்பின்கீழ் இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். பின்பு தொகை செலுத்திய அசல் செலுத்து சீட்டை பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் ஆணையர், சென்னை என்ற முகவரிக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவல் பெரம்பலூரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story