வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பயிற்சி மற்றும் பணி வாய்ப்பு மையம் சார்பில் அரசு அலுவலகங்களில் தட்டச்சு மற்றும் ஸ்டெனோ கிராபி திறன் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பணி அமர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேசன் வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் குமரேசன் அரசு பணிக்கு செல்வதற்குரிய தகுதிகள் குறித்து விளக்கினார். தமிழக அரசு மற்றும் மத்திய தேர்வாணையங்களின் அரசு தேர்விற்கு எப்படி தயார் ஆவது என்று விளக்கினார். தட்டச்சு, சுருக்கெழுத்து பயில்வதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார். முடிவில் உதவி பேராசிரியர் லட்சுமணக்குமார் நன்றி கூறினார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story