வேலைவாய்ப்பு முகாம்


வேலைவாய்ப்பு முகாம்
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டு குழு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரா குரூப் ஆப் கம்பெனியில் பணிபுரிய திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வணிக மேலாண்மை, வணிகவியல்துறை, பொருளாதார துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

இம்முகாமில் நடைபெற்ற தேர்வை ராமச்சந்திரா குரூப் ஆப் கம்பெனியின் மனிதவளத்துறை தலைவர் புனிதா நடத்தினார். கலந்து கொண்ட மாணவர்களில் 30 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லூரி ெசயலர் ச.ஜெயக்குமார், அகதர மதிப்பீட்டு குழு தலைவர் அந்தோணி சகாயசித்ரா, வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் வாழ்த்தினர்.


Next Story