கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 22-ந் தேதி நடக்கிறது
கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் 22-ந் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) நடத்த உள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும், இந்த முகாமில் தகுதியுடைய பெண்கள் பங்கேற்கலாம். அதாவது, 2020-2021 மற்றும் 2022-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 20 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு 12 நாட்கள் பயிற்சியும் அதனுடன் மாத சம்பளமாக ரூ.16,557 மற்றும் உணவு தங்குமிடம், போக்குவரத்து வசதி, பட்டப்படிப்பு பயில்வதற்கான வாய்ப்புகளும், நிரந்தர பணி நியமனமும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.