திறன் பயிற்சி முகாம் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு


திறன் பயிற்சி முகாம் மூலம்  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு  அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
x

திறன் பயிற்சி முகாம் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திறன் பயிற்சி முகாம் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற 1,750 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாம்

நாகர்கோவில் சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் பயிற்சி முகாம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

தொழில்நுட்ப நிறுவனம்

அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய சூழலில் தொழில்நுட்பம் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. மாணவ, மாணவிகள் அதற்கேற்றவாறு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையானது அதிக வருவாய் தரும் வேலையாகும்.நிறுவனங்களின் திறன் தேவைக்கும் பணியாளர்களின் உண்மையான திறமைக்குமான இடைவெளியைக் குறைக்க, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யுடன் இணைந்து தமிழ்நாடு ஐ.சி.டி. அகாடமி இளைஞர் வேலைவாய்ப்பு திறன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

1,750 பேருக்கு வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்ப திறன்களில் தகுதியான 1,750 பேருக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் பயிற்சி நடத்தப்படும்.

மேலும் ரூ.3.5 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் கொண்ட வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள், பாதுகாவலர் அல்லது ஒற்றைப் பெற்றோரால் ஆதரிக்கப்படும் பெண்கள், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள் 100 மணி நேர பயிற்சி அளிக்கப்படும். இதில் 60 மணி நேர தொழில்நுட்பம் மற்றும் 40 மணி நேர மென்மையான திறன் தொழில்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் மதிப்பீடு, சான்றிதழ் மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வசதி, மாணவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு தகுதியான வேலை வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்கங்கள் வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளம் அறிமுகம்

இதனைதொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி குறித்த http://www.ictacademy.in/tactv என்ற புதிய இணையதள சேவையை தொடங்கி வைத்து, வழிகாட்டி புத்தகத்தினை வெளியிட்டார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நெடுஞ்சாலை) ரேவதி, தலைமை செயல் அதிகாரி ஹரி பால சந்திரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல், புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம், முதல்வர் மகேஸ்வரன், பொது மேலாளர் (ஐ.சி.டி. அகாடமி) ஸ்ரீகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

--



Next Story