தமிழகத்தில் மில்லியனாக அதிகரித்த வேலைவாய்ப்பு


x

வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்த வேலைவாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வேலைவாய்ப்பில் உற்பத்தியின் பங்கு 51.6 சதவீதத்தில் இருந்து 56.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு, 2022 ஜனவரி-ஏப்ரலில் 4.2 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது 4.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.


விவசாயத் துறையில், 6.5 மில்லியனில் இருந்து 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம், ஹோட்டல், சுற்றுலா ஆகியவை பெரிய அளவில் வேலைவாய்ப்பைப் பதிவு செய்துள்ளதாக, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


Next Story