1,014 பேருக்கு வேலை வாய்ப்பு
நாகை மாவட்டத்தில் இளைஞர் திறன் திருவிழாவை நடத்தியதில் 1,014 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
நாகை மாவட்டத்தில் இளைஞர் திறன் திருவிழாவை நடத்தியதில் 1,014 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் திறன் திருவிழா
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்டங்கள் தோறும் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது.
இதன் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் விருப்பங்களுக்கு ஏற்ப திறன் பயிற்சி அளிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தருவதாகும்.
4 வட்டாரங்களில் நடந்தது
இளைஞர் திறன் திருவிழா நாகை வட்டாரத்தில் கடந்த ஜூலை 2-ந்தேதி நாகை ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கீழ்வேளுர் பிரைம் கல்வியியல் கல்லூரி, தலைஞாயிறு பேரூராட்சி மண்டபம், திருமருகல் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 5 வட்டாரங்களில் நடத்தி முடிக்கப்படுள்ளது.
1,014 பேருக்கு வேலை
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட 2 ஆயிரத்து 667 இளைஞர்களில் ஆயிரத்து 14 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.