ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்


ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
x

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மார்க்கெட் செல்லும் சாலையில் உள்ள கட்டிடங்களில் கடைகள் வைத்து நடத்தி வருபவர்களில் சிலர் கூறுகையில், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளில் சிலர் தற்போது காய்கறி மார்கெட்டுக்கு செல்லும் சாலையில் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், ஏற்கனவே நகராட்சி கட்டிடங்களில் வாடகை கொடுத்து இயங்கும் மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவைக்கும், அங்கு வருபவர்களுக்கும் இடையூறாகவும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகராட்சி வாடகை கட்டிடங்களில் இயங்கும் மருத்துவமனைகளுக்கும், கடைகளுக்கும் பொதுமக்களால் செல்ல முடியவில்லை. இடையூறு இல்லாமல் கடை வைக்குமாறு அவர்களிடம் கூறினால் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கும், நகராட்சி நிர்வாகத்துக்கும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story