ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு
ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு
திருப்பூர்
திருப்பூர்
திருப்பூர் நெருப்பெரிச்சல் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான புன்செய் நிலம் 8 ஏக்கர் 45 சென்ட் ஆக்கிரமிப்பில் இருந்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலம் மீட்கப்பட்டது. நேற்று திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட நிலம் இந்து அறநிலையத்துறையின் கீழ் சுவாதீனம் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் அறிவிப்பு பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடியாகும்.
Related Tags :
Next Story