அமலாக்கதுறை சோதனை: என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே...! -அமைச்சர் துரைமுருகன்


அமலாக்கதுறை சோதனை: என்ன தான் நடக்கும், நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே...! -அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 17 July 2023 2:40 PM IST (Updated: 17 July 2023 2:49 PM IST)
t-max-icont-min-icon

"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" பாட்டுதான் பாடனும் எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம், நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் இருந்து நீர் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்.

அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு இதே மைதானத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

வேலூர் விளையாட்டு மைதானத்தை தமிழகத்தில் உள்ள ஒன் ஆப் தி பெஸ்ட் விளையாட்டு மைதானமாக மாற்றிக் காட்டுவேன் என்றார்.

அப்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவங்களத்தான் கேட்கனும், "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" பாட்டுதான் பாடனும் எல்லாமே அரசியல் தாங்க என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.


Next Story