சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு சான்றிதழ்
சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு சான்றிதழ்
திருவண்ணாமலை
சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியின் போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட வெறையூர், ஆரணி நகரம் மற்றும் பாச்சல் ஆகிய போலீஸ் நிலைய போலீசாரை வேலூர் சக டி.ஐ.ஜி. முத்துசாமி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story