என்ஜின் பழுதால் நின்ற மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ்


என்ஜின் பழுதால் நின்ற மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ்
x

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை அருகே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை அருகே என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு தினமும் காலை எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வது வழக்கம். இந்த ரெயில் காலை 8.15 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு 9.28 மணிக்கு வந்து 9.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10.40 மணிக்கு சென்றடையும்.இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, பூதலூர், திருச்சிஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். நேற்று இந்த ரெயில் காலை வழக்கம் போல 8.15 மணிக்கு புறப்பட்டது.

என்ஜின் பழுது

தஞ்சையை அடுத்த திட்டை அருகே ரெயில் காலை 9.10 மணிக்கு வந்த போது திடீரென என்ஜின் பழுதானது. இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் இருந்து உடனடியாக மாற்று ரெயில் என்ஜின் கொண்டு வரப்பட்டது.மாற்று ரெயில் என்ஜின் பொருத்தப்பட்ட பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது. 1 மணி நேரம் ரெயில் நடுவழியில் நின்றதால் ரெயிலில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு 10.53 மணிக்கு வந்து சிறிது நேரத்திலேயே திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story