திருப்பரங்குன்றத்தில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை


திருப்பரங்குன்றத்தில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை- காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x

திருப்பரங்குன்றத்தில் ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் ரெயிலில் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் சீனிவாச காலனியை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி லதா (வயது 50). இவர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்தமகன் முருகேசன் (25) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் விடுமுறையில் சென்னையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு வந்து இருந்தார். அப்போது அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

ரெயிலில் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகேசன், அவரது தாயாருக்கு நான் இனிமேல் வீட்டிற்கு வரப்போவது இல்லை என்று வாட்ஸ்-அப் மூலம் ஆடியோ குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும், முருகேசன் இருசக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோடு பகுதிக்கு வந்தார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்று அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முருகேசனின் தற்கொலைக்கு காதல் தோல்வியா? பணம் பிரச்சினையா? பணிசுமையா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story