என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேரன்மாதேவியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி ஆலடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் அருள்முருகன் (வயது 25). என்ஜினீயரான இவர் அரசு பணிக்கு முயற்சித்து வந்ததாகவும், வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story