மன அழுத்தம் காரணமாக என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


மன அழுத்தம் காரணமாக என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

மன அழுத்தம் காரணமாக என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

என்ஜினீயர்

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகர் அருகே உள்ள கலப்பு காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 55), என்ஜினீயர். இவர் குளித்தலை கட்டிட பொறியாளர் சங்க செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி அமுதா (40). இவர் வையம்பட்டி வட்டார வளமையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.விஸ்வநாதன் கடந்த சில மாதங்களாக தொழில் சம்பந்தமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் உள்ள இரும்பு கொண்டியில் எலக்ட்ரிக் வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story