முசிறியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


முசிறியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த பெண்ணை பிரித்து வைத்ததால் முசிறியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

காதல் திருமணம் செய்த பெண்ணை பிரித்து வைத்ததால் முசிறியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ஜினீயர்

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த பேரூரை சேர்ந்த லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியின் மகன் சிபி வர்மன் (வயது 25). பி.இ. என்ஜினீயரிங் படித்துள்ள இவரும் முசிறியை சேர்ந்த 25 வயது பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பை மீறி சிபி வர்மனும், அந்த பெண்ணும் கடந்த 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் சிபி வர்மனின் வீட்டுக்கு வந்து, அந்த பெண்ணை பிரித்து அழைத்து சென்றுவிட்டனர். மேலும் இது தொடர்பாக முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

தற்கொலை

போலீசார் இருகுடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இருகுடும்பத்தினரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபட கூடாது என எழுதி கொடுத்தனர். இதனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை பிரித்து வைத்து விட்டார்களே என சிபிவர்மன் மன வருத்ததில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சிபி வர்மன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த முசிறி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது குறித்து சிபி வர்மனின் பெற்றோர் முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரில், எனது மகனின் சாவுக்கு காரணமான பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story