ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி என்ஜினீயர் பலி
ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி என்ஜினீயர் பலியானார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி என்ஜினீயர் பலியானார்.
என்ஜினீயர் பலி
ராமநாதபுரம் கோழிக்கூட்டு தெருவை சேர்ந்தவர் காஜா முகைதீன். இவருடைய மகன் செய்யது உசேன் (வயது 27). என்ஜினீயரான இவருக்கு திருமணமாகவில்லை.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் தோவாளையில் தங்கி வந்தார். இந்தநிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற ஒப்பந்த பணியை தற்போது அவர் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்ததும் அவர் ஸ்கூட்டர் மூலம் தோவாளை நோக்கி புறப்பட்டார். கண்ணப்பநல்லூர் அருகே சென்றடைந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று செய்யது உசேன் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்யது உசேன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.