காதல் திருமணம் செய்த அக்காள் வீட்டுக்கு செல்ல தடை:என்ஜினீயரிங் கல்லூரி மாணவிதூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த அக்காள் வீட்டுக்கு செல்ல தடை:என்ஜினீயரிங் கல்லூரி மாணவிதூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் திருமணம் செய்த அக்காள் வீட்டுக்கு செல்ல தந்தை தடை விதித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

சங்ககிரி,

என்ஜினீயரிங் மாணவி

சங்ககிரி புதிய எடப்பாடி ரோடு வாணியர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் நளினி வீட்டை விட்டு சென்று, காதல் திருமணம் செய்து கொண்டார். கடைசி மகளான பிரியங்கா (வயது 19), சேலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் 2-வது ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் கல்லூரி மாணவி பிரியங்கா தனது தந்தை பாஸ்கரனிடம், அக்காள் நளினி வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டார். அதற்கு பாஸ்கரன் அனுமதி அளிக்க மறுத்து, அக்காள் வீட்டுக்கு செல்ல தடை விதித்தார்.

மனவேதனை

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா தங்கியிருந்த விடுதி காப்பாளர், பாஸ்கரனை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், பிரியங்கா வெளியே செல்ல அனுமதி கேட்பதாக கூறினார். அதற்கு பாஸ்கரன் பிரியங்காவை வெளியே அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால் பிரியங்கா தனது தந்தையிடம் பேசாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில் 3 நாள் விடுமுறையாக பிரியங்கா தனது வீட்டுக்கு சென்றார். மேலும் அவர் அக்காள் வீட்டுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா, மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பாஸ்கரன் அவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் பிரியங்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story