என்ஜினீயரிங் மாணவி திடீர் தற்கொலை


என்ஜினீயரிங் மாணவி திடீர் தற்கொலை
x

என்ஜினீயரிங் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

ராஜபாளையம்,

என்ஜினீயரிங் மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

என்ஜினீயரிங் மாணவி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீசுவரன். இவருடைய மகள் குருபிரியா (வயது 17). இவர் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு அவர், மாத்திரை சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு போக வேண்டியதுதானே என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவி அவரது பாட்டி வீட்டில் இரவு தங்கியுள்ளார்.

தற்கொலை

மறுநாள் காலை மாணவியை கல்லூரிக்கு அனுப்புவதற்காக அவரைத்தேடி தந்தை முனீசுவரன் சென்றிருக்கிறார். அங்கு தனது மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மீட்டு, சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, ஏற்கனவே குருபிரியா இறந்துவிட்டது தெரியவந்தது.

இந்த சோக சம்பவம் குறித்து முனீசுவரன் அளித்த புகாரின் பேரில், மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story