பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி


பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
x

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. முயற்சி செய்தால் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதே இந்த பயிற்சி வகுப்பின் நோக்கம். நல்ல மொழி அறிவோடு இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு நிச்சயம் அமையும். தொடர்ச்சியான முயற்சிகளால் தான் பெரிய மாற்றங்கள் நடந்து இருக்கிறது. எனவே மாணவர்கள் இந்த ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காளீஸ்வரி கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story