எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்
தைப்பூச திருவிழாவையொட்டி எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரடாச்சேரி:-
தைப்பூச திருவிழாவையொட்டி எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுப்பிரமணியசுவாமி கோவில்
கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் (ஜனவரி) 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் சாமிக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தேரோட்டம்
இதை தொடர்ந்து தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார். இதையடுத்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
தேர் நான்கு வீதிகளிலும் சுற்றி வந்து கீழவீதியில் உள்ள நிலைய அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று தைப்பூச விழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தைப்பூச விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த விழா வருகிற 7-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.