எண்ணூர் சின்னம்மன் கோவிலில் 1 லட்சம் மின் விளக்குகளால் அலங்காரம்


எண்ணூர் சின்னம்மன் கோவிலில் 1 லட்சம் மின் விளக்குகளால் அலங்காரம்
x

எண்ணூர் சின்னம்மன் கோவிலில் 1 லட்சம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தபடி காணப்பட்டது.

சென்னை

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் சின்னம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு புத்தாண்டின்போது அம்மனை விதவிதமாக அலங்கரித்து புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக சின்னம்மன் கோவிலில் அம்மன் உள்பட கோவிலை சுற்றிலும் சுமார் ஒரு லட்சம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தபடி காணப்பட்டது.

கோவில் முன்பு லிங்கம் வடிவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் மூலவர் சின்னம்மனுக்கு கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டு, மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு நாகம் வடிவில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story