குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி
நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதம் முதல் 2 வயது வரை 898 குழந்தைகளும், 2 வயது முதல் 6 வயது வரை 403 குழந்தைகளும் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் நிகழ்ச்சி நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் 6 மாதம் முதல் 6 வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 10 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சியாமளா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.