தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம்


தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம்
x

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை கடிதம்.

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாகப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள், 3 படகுகளில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை தாக்கி அவர்களுடைய வலை, 40 குதிரை திறன் கொண்ட என்ஜின், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் மற்றும் பிற உடைமைகளை பறித்துச்சென்றுவிட்டனர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் காயங்களோடு தமிழகம் வந்தடைந்து உள்ளனர். நாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்திய கடலோர பாதுகாப்பு படை ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் தனது வளையத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும், வாழ்வாதாரமாக விளங்கிய மீன்பிடி உபகரணங்களை கடல்கொள்ளையர்கள் பறித்துச்சென்றுள்ளதால் அதற்கான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான உத்தரவாதத்தை தரும் வகையில் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாததையும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story