திட்டத்தை தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், செயல்படுத்தி முடிக்கும் வரை இருக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திட்டத்தை தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், செயல்படுத்தி முடிக்கும் வரை இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பொருளாதார குறியீட்டில் தமிழ்நாடு தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தலைசிறந்து விளங்கும் வகையில் இந்த திட்டங்களை தீட்டி வருகிறோம். இன்றைய தேவைகளுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால தேவைகளுக்கும் அமைந்திருக்கின்றன.
நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க வேண்டும். திட்ட செயல்பாடுகளில் சில இடங்களில் இன்னும் கவனம் தேவை என்பதை கள ஆய்வில் அறிந்தேன்.
அரசு செயலாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். திட்டத்தை தொடங்கும் போது இருக்கும் ஆர்வம், செயல்படுத்தி முடிக்கும் வரை இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story