கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் சேலத்தில் இருந்து நெல்லைக்கு சென்றார். அவருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கோவில்பட்டி- இனாம் மணியாச்சி சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'இந்த அதிகாலை நேரத்தில் எனக்கு வரவேற்பு கொடுத்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.