பாரதியார்-செல்லம்மாள் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு


பாரதியார்-செல்லம்மாள் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு
x

கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

பாரதியாா்-செல்லம்மாள் 125-வது திருமண நாள் விழாவை முன்னிட்டு சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் பாரதியார்-செல்லம்மாள் சிலைகள் வடிக்கப்பட்டு ரத ஊர்வலமாக கடந்த 50 நாட்களாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் சுமார் 1,000 கிலோமீட்டர் சுற்றி வந்தது. இந்த ரத ஊர்வலம் நேற்று தென்காசி மாவட்டம் கடையத்தை வந்தடைந்தது. கடையம் வந்த ரதத்திற்கு வடக்கு தெரு பிள்ளையார் கோவில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னாள் தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் தலைமையில், ஓய்வுபெற்ற ஆசிரியர் கோபால் முன்னிலையில் லயன்ஸ் கிளப் குமரேசன், பத்திர எழுத்தர் பால்சிங், ராஜசேகர், ஆகியோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பாரதியார்-செல்லம்மாள் சிலைக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சேவாலயா கிங்ஸ்டன் காஞ்சனா, ஒருங்கிணைப்பாளர் சங்கிலிபூதத்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். சேவாலயா நிறுவனர் முரளிதரன் நன்றி கூறினார்.

பின்னர் கல்யாணிபுரத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். ரிலயபிள் கல்வி நிறுவனர் சந்திரசேகர் வரவேற்றார். தொடர்ந்து கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன், ஆணையாளர் முருகையா, கவுன்சிலர்கள் புளி கணேசன், மாரிகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை, பூமிநாத், முத்துலட்சுமி ராமதுரை, முகைதீன் பீவி அசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், கல்யாணி சிவகாமிநாதன், முருகன், மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆதர்ஷ் பள்ளி மாணவர்கள் பாரதியார் பற்றி கவிதைகள் மற்றும் உரையாற்றினார்கள். அனைவருக்கும் பாரதியாரின் கவிதை புத்தகம் வழங்கப்பட்டது.


Next Story