பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு
தமிழக அரசு சார்பில், மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான பிரத்யேக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித்தேர்வுக்கான ஒரு வருட இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
மதுரை
தமிழக அரசு சார்பில், மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான பிரத்யேக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித்தேர்வுக்கான ஒரு வருட இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கான எழுத்துத்தேர்வு கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த தேர்வில், மதுரை, நெல்லை, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பட்டதாரி பெண்கள் பங்கேற்றனர். தேர்வு நடந்த அறைகளில் கல்லூரி முதல்வர் வானதி ஆய்வு மேற்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியைகள் கலா, சாந்தி, பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story