அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்


அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
x
தினத்தந்தி 7 March 2023 1:06 PM IST (Updated: 7 March 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நாள் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் தமிழக அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


1 More update

Next Story