தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதல்வர் பெரியசாமி தலைமை தாங்கினார். மேலாண்மைத்துறை தலைவர் மெய்கண்டகணேஷ்குமார் முன்னிலை வகித்தார். முனைவர் ஜெயபாலன் வரவேற்றார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முதன்மை பயிற்றுநர் அருமைரூபன், அக்ரிடெக் நிறுவன தலைமை நிர்வாகி அருணேஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தொழில் நுட்ப கொள்கை மற்றும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். முடிவில் பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story