தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு


தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு
x
தினத்தந்தி 11 May 2023 12:30 AM IST (Updated: 11 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது.

தேனி

தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எந்திரவியல் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் மாதவன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story