தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி


தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு, புத்தாக்க நிறுவனம் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இதில் செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி வட்டாரங்களில் உள்ள 94 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதை ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குனர் பழனி தொடங்கி வைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் திட்டம் பற்றி பேசினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், புத்தாக்க நிறுவன பயிற்றுனர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story