தொழில் முனைவோர் பயிற்சி கூட்டம்


தொழில் முனைவோர் பயிற்சி கூட்டம்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தொழில் முனைவோர் பயிற்சி கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து சிறு, குறு தொழில் முனைவோருக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினார். மேலும் புதியதாக அரசு கொண்டு வந்துள்ள அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டத்தை பற்றி விளக்கிக்கூறினார். கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் மானியம் தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். செயலாளர் சூர்யா நன்றி கூறினார்.


Next Story