பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்


பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள்
x

குடியாத்தத்தில் 2 பாம்புகள் பின்னி பிணைந்து நடனமாடின.

வேலூர்

குடியாத்தம் நகரம் எம்.பி.எஸ்.நகர் பகுதியில் ஒரு வீட்டின் கட்டிட இடிபாடுகளுக்கு அருகே சத்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது இரண்டு பெரிய சாரைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. இதனைகாண பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. சுமார் ஒரு மணி நேரம் பின்னி பிணைந்து நடனமாடிய பாம்புகள் பொதுமக்களின் சத்தம் கேட்டதும் அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டன.


Next Story