செஞ்சியில்சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


செஞ்சியில்சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம்


செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செஞ்சி பேரூராட்சி மன்றம் மற்றும் ஆக்ருதி இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் சங்கமம் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

இதற்கு கல்லூரியின் தலைவர் பப்ளாசா தலைமை தாங்கினார். செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குனர் அமித்குமார் வரவேற்றார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பேரணியில் செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், கல்லூரி முதல்வர் டாக்டர் ஹரிகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செஞ்சி பார்த்தசாரதி, (போக்குவரத்து) அப்பண்டைராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, வார்டு கவுன்சிலர்கள் ஜான்பாஷா, சுமித்ரா சங்கர், பேரூராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story