சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்- மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத   களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்-     மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்
x

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரோடு

மொடக்குறிச்சி

இந்துக்கள் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மிக சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி ஆகும். இதையொட்டி களிமண்ணால் விநாயகர் சிலைகளை வடிவமைத்து அதில் வண்ணம் தீட்டுவர். பின்னர் விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் பல்வேறு ரசாயனங்கள் உள்ளன. மேலும் இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. எனவே ரசாயனங்கள் இல்லாத களிமண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி விநாயகர் சிலைகளை தயாரிக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த மாசு ஏற்படுத்தாத களிமண்ணை பயன்படுத்தும் கைவினைஞர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் அரசு விதிகளின்படி மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு குலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை பயன்படுத்துவதால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். எனவே மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மக்கள் பயன்படுத்துவதை அரசு அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Related Tags :
Next Story