தண்ணீர் தேங்கும் இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட எதிர்ப்பு


தண்ணீர் தேங்கும் இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட எதிர்ப்பு
x

தண்ணீர் தேங்கும் இடத்தில் பள்ளிக்கட்டிடம் கட்ட எதிர்ப்பு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆரம்ப பள்ளி உள்ளது. தற்போது கட்டிடம் சேதமடைந்துள்ளதால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேர்வான இடம் பள்ளிக்கு சேர்ந்த இடம் இல்லை. பள்ளிகட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பொதுகோவில், கிணறு, குளம் போன்றவை உள்ளது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகவும் இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், தண்ணீர் தேங்கி நிற்கும் இடமாகவும் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி, புதிய பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கு அருகே பள்ளிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் கட்டிக்கொடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோல் பள்ளி மேலாண்மைக்குழு சார்பிலும் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.




Next Story