இபிஎஸ் - ஓபிஎஸ் கடித விவகாரம்: நியாயமான முடிவு எடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நெல்லை மாவட்டம், களக்காட்டில் ரூ.6.25 கோடி மதிப்பில் வாழை ஏலம் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அப்போது, தமிழக சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் தன்னை கலந்து தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர் கூறியதாவது ;
நான் இங்கு இருக்கிறேன். அந்த கடிதங்களை இன்னும் படித்து பார்க்கவில்லை, ஆளுக்கு 2 கடிதம் கொடுத்துள்ளனர். அவைகள் எனது பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும் கடிதங்களை படித்து பார்த்து நியாயமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story