சாத்துமதுரையில் சமத்துவ பொங்கல் விழா


சாத்துமதுரையில் சமத்துவ பொங்கல் விழா
x

சாத்துமதுரையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை ஊராட்சியில் சுகாதாரம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கணியம்பாடி ஒன்றியக் குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர்விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மகளிர் குழு உறுப்பினர்களுடன் சேர்ந்து புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டார். வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர்விசுவநாதன் கலை மற்றும் பேச்சு போட்டி, கோலம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், கவுரி, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், தாசில்தார் செந்தில், கிராம கல்விக்குழு தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story