சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் விபத்தில் பலி


சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் விபத்தில் பலி
x

சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் விபத்தில் பலியானார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அண்ணாசாமி (வயது 40). இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளராக இருந்தார். நேற்று மாலை இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோவர் வளைவு அருகே உள்ள ஒரு சினிமா தியேட்டர் எதிரே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து மொபட் எதிர்பாராதவிதமாக சாலையின் மைய தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட அண்ணாசாமி எதிர்புறம் உள்ள சாலையில் விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story