அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x

அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

திருவாரூர்

திருவாரூரில் உள்ள அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறுவர்களுக்கான போட்டிகள்

திருவாரூர் தாலுகா அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறுவர்- சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், புவனேஸ்வரி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய வேட்டி சட்டை

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவில் பாரம்பரிய வேட்டி, சட்டையுடன் மாட்டுவண்டியில் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசாருக்கான சிலம்பாட்டம், உறி அடித்தல், ஒட்டப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

முதன்மை மாவட்ட நீதிபதி

திருவாரூர் வக்கீல் சங்கம் சார்பில் கோா்ட்டு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி சாந்தி, தலைமை குற்றவியல் நீதிபதி பாலமுருகன், நீதித்துறை நடுவர் நீதிபதி ரகுபதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் வக்கீல் சங்க தலைவர் விநாயகமூர்த்தி மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் அகிலா சந்திரசேகர், முன்னாள் துணை தலைவர் செந்தில், நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story